கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தெங்கு அட்னான் மன்சோர் சம்பந்தப்பட்ட வழக்கில் அரசு தரப்பு குறிப்பிட்டுள்ள புதிய முன்னேற்றங்கள் குறித்த விசாரணையைத் தொடங்குவதாகக் கூறியுள்ளது.
இந்த வழக்கில் ஒரு சாட்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையும் இதில் அடங்கும் என்று எம்ஏசிசி தெரிவித்துள்ளது.
“நாங்கள் இந்த விஷயத்தை சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திற்கு பரிசீலிப்போம்” என்று அது ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இன்று முன்னதாக, கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி, சில புதிய முன்னேற்றங்கள் காரணமாக தெங்கு அட்னானுக்கு எதிரான வழக்கைத் தொடர விரும்பவில்லை என்று அரசு தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்து, அவரை முழு விடுதலையின்றி தற்காலிகமாக விடுவித்தார்.
தொழிலதிபர் தான் எங் பூனிடமிருந்து 1 மில்லியனைப் பெற்றதாக தெங்கு அட்னானுக்கு எதிரான குற்றம் சாட்டப்பட்டது.
முன்னதாக, முன்னாள் கூட்டரசு பிரதேச அமைச்சருமான தெங்கு அட்னானுக்கு உதவியதாக, குற்றம் சாட்டப்பட்ட தொலிழதிபருக்கு நீதிமன்றம் 1.5 மில்லியன் அபராதம் விதித்தது.