Home One Line P2 நீதிமன்ற விசாரணை முடியும் வரை இந்திய நாடாளுமன்ற புதிய கட்டிடம் கட்டப்படக்கூடாது!

நீதிமன்ற விசாரணை முடியும் வரை இந்திய நாடாளுமன்ற புதிய கட்டிடம் கட்டப்படக்கூடாது!

652
0
SHARE
Ad

புது டில்லி: மத்திய அரசின் விஸ்டா திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவின் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டபப்ட உள்ளது. இந்தியாவின் தற்போதைய நாடாளுமன்றம்அடுத்த ஆண்டு தனது 100- வது வயதை எட்டவுள்ளது. வரும் 10- ஆம் தேதி இப்புதிய கட்டடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார்.

இவற்றின் மீது உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு காணொலி மூலம் விசாரணை நடத்தியது. அப்போது, புதிய நாடாளுமன்றம் கட்டுவது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது, கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருப்பது அதிருப்தி அளிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

10- ஆம் தேதி அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மட்டுமே நடைபெறும் என்றும், புதிய நாடாளுமன்றத்திற்காக கட்டடங்கள் எதையும் இடிக்கக் கூடாது. புதிய கட்டடமும் கட்டக் கூடாது என்று நீதிபதி கூறினார். விசாரணையில் இருக்கும் மனுக்களுக்கு தீர்வு காணப்படும் வரை இதே நிலை தொடர வேண்டும் என்று தெரிவித்தார்.