கோலாலம்பூர்: இன்று காலை 9.50 மணியளவில் சுல்தான் நஸ்ரின் ஷாவைச் சந்திக்க அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி இஸ்தானா கிந்தாவை வந்தடைந்தார்.
புதிய மந்திரி பெசார் வேட்பாளரின் பெயரை வழங்க அகமட் சாஹிட் காலை 10 மணிக்கு சுல்தானை சந்திக்க உள்ளார்.
அதன் பிறகு, பேராக் அம்னோ தலைவர் சரணி முகமட்டும் இஸ்தானா கிந்தாவினுள் நுழந்தார்.
பெர்சாத்து துணைத் தலைவர் அகமட் பைசால் அசுமு டிசம்பர் 4-ஆம் தேதி மந்திரி பெசார் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், சுல்தான் நஸ்ரினுடனான அவர்களின் இரண்டாவது சந்திப்பு இன்று நடைபெறுகிறது.