Home One Line P1 பெரும்பான்மை இருந்தால் மாமன்னருக்கு சத்தியப்பிரமாணங்களை அனுப்பலாம்!

பெரும்பான்மை இருந்தால் மாமன்னருக்கு சத்தியப்பிரமாணங்களை அனுப்பலாம்!

494
0
SHARE
Ad

கோலாலம்பூர்: எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் பெரும்பான்மை ஆதரவுடன் பிரதமராக வருவதற்கு எந்த தடையும் இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் இன்று தெரிவித்தார்.

எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் 112- க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை மாமன்னருக்கு நிரூபிக்க சத்தியப்பிரமாணங்களை அனுப்ப முடியும் என்று அவர் கூறினார்.

“இது ஜனநாயகத்தின் ஒரு பகுதி என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்,” என்று அவர் மக்களவையில் அமைச்சர் கேள்வி நேரத்தில் கூறினார்.

#TamilSchoolmychoice

எவ்வாறாயினும், கடந்த மாதம் கொள்கை கட்டத்தில் 2021 வரவு செலவு திட்டம் நிறைவேற்றியதன் மூலம், பிரதமர் மொகிதின் யாசினுக்கு இன்னும் பெரும்பான்மை ஆதரவு உள்ளது என்று தக்கியுடின் கூறினார்.

மொகிதின் யாசினுக்கு பதிலாகப் பதிலளித்த தக்கியுடின், பிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் நம்பிக்கை தீர்மானங்களை அரசாங்கம் அனுமதிக்கும். ஆனால், நாடாளுமன்ற விதி 14 மற்றும் 15 இன் படி, அரசாங்க விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று கூறினார்.