ஈப்போ: கோத்தா தம்பான் சட்டமன்ற உறுப்பினர் சரணி முகமட் 14- வது பேராக் மந்திரி பெசாராகப் பதவியேற்றார்.
பேராக் அம்னோ தலைவரான சரணி, இன்று கோலா காங்சாரில் இஸ்தானா இஸ்கண்டாரியாவில் பேராக் சுல்தான் நஸ்ரின் ஷாவின் முன்னிலையில் பதவியேற்றார்.
முன்னதாக, நேற்று புதன்கிழமை அம்னோ, பெர்சாத்து மற்றும் பாஸ் கட்சி அம்னோவின் சரணி முகமட்டை பேராக் மாநில மந்திரி பெராசாக நியமிக்க சம்மதம் தெரிவித்திருந்தன.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தொடங்கிய அரசியல் நெருக்கடி இறுதியில் நிறைவுற்றது. இந்த விவகாரத்தை தேசிய முன்னணி பொதுச் செயலாளர் டான்ஸ்ரீ அனுவார் மூசா, தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
அவ்வறிக்கையில், பாஸ் கட்சி பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான், பெர்சாத்து பொதுச் செயலாளர் சைனுடின் ஹாம்சா மற்றும் அனுவார் மூசா ஆகியோர் கையெழுத்திட்டிருந்தனர்.