Home One Line P2 கொவிட்-19: தடுப்பு மருந்து அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை!- டிரம்ப்

கொவிட்-19: தடுப்பு மருந்து அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை!- டிரம்ப்

482
0
SHARE
Ad

வாஷிங்டன்: கொவிட்-19 தடுப்பு மருந்தை வழங்குவதில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கான உத்தரவில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

அமெரிக்கர்களுக்கு தடுப்பு மருந்தைப் பெறுவதில் முன்னுரிமை வழங்குவதற்காக, தேவைப்பட்டால் இராணுவ தயாரிப்பு சட்டத்தை (defence production act) பயன்படுத்த தயாராக இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

செயல்படும் கொவிட்-19 தடுப்பு மருந்துகளை அமெரிக்க நிறுவனங்களே முதல்முறையாக உருவாக்கியுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“நாம் ஒன்றாக இணைந்து கொவிட்டை வீழ்த்துவோம். நம் நாட்டிலும், உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான மக்களின் உயிர்களை காப்பாற்றுவோம்,” என்று டிரம்ப் கூறினார்.

அமெரிக்காவை சேர்ந்த பிபைசர், மாடெர்னா ஆகிய இரு நிறுவனங்களும் உருவாக்கியுள்ள கொவிட்-19 தடுப்பு மருந்துகள் இறுதிகட்ட சோதனையிலும் வெற்றிபெற்றுள்ளன. அண்மையில், பிரிட்டனில் முதல் முறையாக 90 வயது மூதாட்டிக்கு இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.