மேலும், அவரது கண்ணத்தில் இருந்த கீறல்கள் சித்ராவின் நகங்களால் கீறப்பட்டவையே என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, சித்ராவின் தாயார், தமது மகளை ஹேமந்த் கொன்று விட்டதாகக் கூறும் காணொலிகள் பரவலாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்தன.
விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைக்காட்சி நாடகத்தில் ‘முல்லை’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா, 28, நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின.
சென்னை நசரத்பேட்டையில் உள்ள தங்கும் விடுதியில் அவர், புதன்கிழமை அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இச்செய்தி அவரது இரசிகர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
சில மாதங்களுக்கு முன், சித்ராவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஹேமந்த் ரவி என்ற தொழிலதிபரை அவர் பதிவு திருமணம் செய்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.