Home One Line P1 ஜே-கோம் நிதி 45 மில்லியன் குறைப்பு!

ஜே-கோம் நிதி 45 மில்லியன் குறைப்பு!

584
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சமுதாய தகவல் தொடர்புத் துறைக்கு (ஜே-கோம்) அல்லது சிறப்பு விவகாரங்கள் துறை (ஜாசா) என்று அழைக்கப்பட்ட துறைக்கு, 85.5 மில்லியனில் இருந்து 45 மில்லியனைக் குறைப்பதற்கான தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

துணை நிதியமைச்சர் அப்துல் ரஹீம் பக்ரி அவர்களால் இந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

அரசுக்கும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விவாதத்திற்குப் பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

#TamilSchoolmychoice

“இந்த தீர்மானத்தை நிராகரிப்பதால், அங்கீகரிக்கப்பட்ட அசல் தொகையான 85.5 மில்லியனை மீட்டுக் கொண்டு, ஜே- கோம்-க்கு 45.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும். இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மிகவும் முக்கியமானது,” என்று அவர் தனது இறுதி உரையில் கூறினார்.

முன்னதாக, தேசிய முன்னணி அரசாங்கத்தின் பிரச்சாரகர் என்று அழைக்கப்படும் ஜாசாவை மீண்டும் நிறுவியதால், எதிர்க்கட்சி உட்பட பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பெரும் விமர்சனங்கள் பெறப்பட்டது. கொவிட் -19 பரவலுக்கு மத்தியில் இந்த நிதியை மிக முக்கியமான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம் என்று கூறினர்.

நம்பிக்கை கூட்டணி நிர்வாகத்தின் போது இந்த துறை இரத்து செய்யப்பட்டது.