உள்ளூரில் 1,799 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், 11 சம்பவங்கள் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் மூலம் பெறப்பட்டதாகும்.
இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 80,309 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
இன்று 937 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 67,173-ஆக உயர்ந்துள்ளது.
மாநிலம் வாரியாக சிலாங்கூரில் அதிகமாக 829 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. சபாவில் 532 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. கோலாலம்பூரில் 132 சம்பவங்களும், ஜோகூரில் 69 சம்பவங்களும் பதிவாகி உள்ளன.
இன்று 6 பேர் மரணமுற்ற நிலையில் மரண எண்ணிக்கை 402-ஆக உயர்ந்துள்ளது.