Home One Line P1 பிரதமர் இந்தியர்களின் மீது அக்கறை கொண்டவரா? தமிழ்ப் பள்ளிகளுக்கான ஒதுக்கீட்டை உயர்த்துவாரா?

பிரதமர் இந்தியர்களின் மீது அக்கறை கொண்டவரா? தமிழ்ப் பள்ளிகளுக்கான ஒதுக்கீட்டை உயர்த்துவாரா?

568
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தமிழ்ப் பள்ளிகளுக்கான ஒதுக்கீட்டு விவகாரத்தில், பிரதமர் மொகிதின் யாசினின் அரசாங்கம் இந்தியர்களை எவ்வாறு கவனித்துக் கொள்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் பள்ளிகளுக்கான ஒதுக்கீட்டில் 42 விழுக்காட்டு குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

“முந்தைய ஆண்டுகளில் 50 மில்லியன் ஒதுக்கப்பட்டது. இப்போது தமிழ்ப்  பள்ளிகளுக்கான திட்டமிடப்பட்ட ஒதுக்கீடு 29 மில்லியன் மட்டுமே. இது ஏமாற்றமளிக்கிறது. முந்தைய ஒதுக்கீடுகள் ஏற்கனவே போதுமானதாக இல்லை என்பது அறியப்பட்ட உண்மை. இதன் விளைவாக தமிழ்ப் பள்ளிகளில் மோசமான பராமரிப்பு மற்றும் வசதிகள் இல்லாமல் இருக்கிறது,” என்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை முகநூலில் பதிவிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

போதிய கணினிகள், உடைந்த நாற்காலிகள் மற்றும் மேசைகள், உடைந்த கழிப்பறைகள் மற்றும் பிற பராமரிப்பு பிரச்சனைகள் இருப்பதாக அவர் கூறினார்.

“மலேசியாவில் உள்ள பெரும்பாலான தமிழ்ப் பள்ளிகள் 70 மற்றும் 80- களில் கட்டப்பட்டவை. 527 தமிழ்ப் பள்ளிகளில் கிட்டத்தட்ட 70 விழுக்காடு கிராமப்புறங்களில் அமைந்துள்ளன. அவை மேம்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும். மலேசியாவில் உள்ள தமிழ் பள்ளிகளின் நிலை, கிடைக்கக்கூடிய வசதிகள், கட்டிட பாதுகாப்பு, பராமரிப்பு அட்டவணை தொடர்புடைய தரவு குறித்த அறிக்கைகளை கல்வி அமைச்சு தயார் படுத்தவில்லை. பி40 இந்திய குடும்பங்களிடையே வறுமையை ஒழிப்பதற்கு கல்வி முக்கியமாகும், ” என்று சார்லஸ் தெரிவித்தார்.

எனவே தேசிய கூட்டணி அரசாங்கம் தமிழ்ப் பள்ளிகளுக்கான ஒதுக்கீட்டை 50 மில்லியனிலிருந்து 60 மில்லியனாக அதிகரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.