Home One Line P1 எம்ஏசிசி: அம்னோ, எஸ்யூபிபியிடம் பறிமுதல் செய்யப்பட்ட நிதி திருப்பித் தரப்பட்டது

எம்ஏசிசி: அம்னோ, எஸ்யூபிபியிடம் பறிமுதல் செய்யப்பட்ட நிதி திருப்பித் தரப்பட்டது

487
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 1எம்டிபி தொடர்பான விசாரணையின் போது பெக்கான் அம்னோ மற்றும் சரவாக் எஸ்யூபிபி கட்சிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நிதியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் திருப்பித் தந்துள்ளது.

பெக்கான் அம்னோவுக்குச் சொந்தமான 700,000 ரிங்கிட்டும், எஸ்யூபிபிக்குச் சொந்தமான 188,138 ரிங்கிட்டை எம்ஏசிசி திருப்பி அளித்தது. அவை 1எம்டிபி நிதியுடன் இணைக்கப்பட்டதாகக் கூறப்பட்டதுடன், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து மாற்றப்பட்டது என்று கூறப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட நிதியை பறிமுதல் செய்வதற்கான எம்ஏசிசியின் விண்ணப்பத்தை, நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாக அதன் வழக்கறிஞர் அப்துல் ராஷிட் சுலைமான் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பெக்கான் அம்னோவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 700,000 ரிங்கிட் சட்டவிரோத நடவடிக்கையின் வருமானம் என்பதை நிரூபிக்க எம்ஏசிசி தவறியதால் இந்த பறிமுதல் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது.

நீதிபதி அகமட் ஷாஹிர் முகமட் சல்லே, பயன்பாடுகள், உபகரணங்கள் வாங்குதல் மற்றும் பிற கொடுப்பனவுகளுக்கான செலவுகளுக்காக 700,000 ரிங்கிட் பயன்படுத்தியதாக பெக்கான் அம்னோ கூறியதாகக் கூறினார். இவை நஜிப் ரசாக் கணக்கிலிருந்து வந்தவை என்ற ஆதாரமில்லை என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், எம்ஏசிசியின் முன்னாள் தலைமை ஆணையர், லத்தீபா கோயா, 1எம்டிபி நிதியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 270 மில்லியன் பறிமுதல் செய்ய 41 நிறுவனங்களின் நிதியை பறிமுதல் செய்ய வழக்கைத் தாக்கல் செய்ததாக கூறினார்.