Home One Line P2 ரஜினிக்கு ‘ஆட்டோ’, கமலுக்கு ‘கைமின் விளக்கு’

ரஜினிக்கு ‘ஆட்டோ’, கமலுக்கு ‘கைமின் விளக்கு’

662
0
SHARE
Ad

சென்னை: ரஜினிகாந்தின் கட்சிக்கு ‘மக்கள் சேவை கட்சி’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், வருகிற தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அவருக்கு ‘ஆட்டோ’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரஜினி கட்சியை மற்றொருவர் பெயரில் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. ‘அனைத்திந்திய மக்கள் சக்தி கழகம்’ என்று அக்கட்சிக்கு பெயரிடப்பட்டிருந்தது. ஆனால், திரைப்படம் ஒன்றில் இந்த கட்சியின் பெயர் பயன்படுத்தப்பட்டதால், கட்சிப் பெயர் ஒரு வருடத்திற்குப் பிறகு ‘மக்கள் சேவை கட்சி’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ரஜினியின் கட்சி 234 தொகுதிகளிலும் ‘ஆட்டோ’ சின்னத்தில் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

டிசம்பர் 31- ஆம் தேதி ரஜினி இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார்.

இதனிடையே, கமல்ஹாசனின் கட்சியான மக்கள் நீதி மய்யத்திற்கு, கடந்த மக்களவை தேர்தலில் வழங்கப்பட்ட ‘டார்ச் லைட்’ சின்னத்தையே தற்போது தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.