Home One Line P1 தேமு இன்னமும் வேறு முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது!- நஜிப்

தேமு இன்னமும் வேறு முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது!- நஜிப்

482
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய முன்னணி முன்வைத்த இரண்டு கோரிக்கைகள் வரவு செலவுத் திட்டத்தில் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில், தேசிய முன்னணி அத்திட்டத்தை ஆதரித்தது குறித்து மக்கள் கேள்வி எழுப்புவதை தாம் அறிவதாக நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.

இன்னும் இரண்டு வாரங்களில் 2021 தொடங்க இருக்கும் நிலையில், வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்தால், அதனை சரி செய்வதற்கு அரசாங்கத்திற்கு போதிய நேரம் இல்லை என்று அவர் கூறினார்.

“ஈபிஎப் முதல் கணக்கிலிருந்து பணத்தைப் பெறும் விசயத்தில், தேசிய முன்னணி போராடி 600,000 பேருக்கு வழங்க இரருந்த வாய்ப்பை, 8 மில்லியன் பேருக்கு உதவும் வகையில் கொண்டு வந்தது.

#TamilSchoolmychoice

“கடன் தள்ளுபடி கால அவகாசம் விவகாரத்தில், நாங்கள் அதனை பி40, எம்40 பிரிவினருக்கு உதவும் வகையில் கொண்டு வந்தோம். பி40, எம்40 மற்றும் சிறு நடுத்தர வணிகப் பிரிவினருக்கு எந்தவொரு கடனைத் திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. ஆகவே, நாங்கள் பொய்யாக நம்பிக்கையை விதைக்கவில்லை,” என்று நஜிப் கூறினார்.

ஆனால், இவ்விரு விவகாரங்களிலும் இன்னும் பிரச்சனைகள் இருப்பதை தாம் அறிந்துள்ளதாகவும், சில வங்கிகள் பிடிவாதமாக இதனை சரிசெய்யவில்லை என்பதையும் நஜிப் சுட்டிக் காட்டினார்.

“இந்த இரண்டு பிரச்சனைகள் முறையாக தீர்க்கப்படும் வரை நானும், தேசிய முன்னணியும், அரசாங்கத்தை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோருவோம். இந்த இரண்டு விஷயங்களும் சரி செய்யப்படும் என்று தேசிய கூட்டணி அரசாங்கம் நம்மிடம் கூறியுள்ளது. அப்படி நடக்காவிட்டால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தால், தேசிய முன்னணி பின்னர் ஏதாவது செய்வதற்கு இன்னும் வாய்ப்பு உள்ளது,” என்று நஜிப் எச்சரித்தார்.