ஈப்போ: பேராக்கில் புதிதாக நியமிக்கப்பட்ட மந்திரி பெசார், சராணி முகமட், பேராக் சட்டமன்ற உறுப்பினரிடமிருந்து ஒருமனதாக ஆதரவைப் பெற்றார். மாநில தலைமை நிர்வாகியாக தொடர அவர் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் உட்பட அனைவரின் ஆதரவையும் பெற்றார்.
இன்று மாநில சட்டமன்றத்தில் நம்பிக்கை தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டபோது, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சரணிக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
பேராக் சட்டமன்ற சபாநாயகர் முகமட் சாஹிர் அப்துல் காலிட், நம்பிக்கை தீர்மானத்திற்கு யாராவது ஆட்சேபனை தெரிவிக்கிறாரா என்று கேட்டபோது யாரும் எழுந்து நிற்கவில்லை.
“இந்த தீர்மானத்திற்கு ஒப்புக்கொண்டவர்கள் அனைவரையும் உள்ளடக்கியுள்ளதால், இந்த தீர்மானம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இன்று வெளிப்படுத்தப்பட்ட அரசியல் முதிர்ச்சிக்கு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள்” என்று சாஹிர் கூறினார்.
ஒரு வாரத்திற்கு முன்னர் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் வெளியேற்றப்பட்ட முன்னாள் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமுவுக்குப் பதிலாக, டிசம்பர் 10- ஆம் தேதி புதிய மந்திரி பெசாராக சராணி பதவியேற்றார்.