Home One Line P1 சார்லஸ் சந்தியாகுவை வாக்குமூலம் அளிக்க புக்கிட் அமான் அழைத்துள்ளது

சார்லஸ் சந்தியாகுவை வாக்குமூலம் அளிக்க புக்கிட் அமான் அழைத்துள்ளது

565
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாளை வெள்ளிக்கிழமை காலை 10.45 மணிக்கு புக்கிட் அமானில் வாக்குமூலம் அளிக்க கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகுவை  காவல் துறை அழைத்துள்ளது.

பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012, அல்லது சோஸ்மா குறித்த ஒரு குழு உரையாடல் குறித்து வாக்குமூலம் பதிவு செய்ய சந்தியாகு  அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவாரா ராக்யாட் மலேசியா (சுஹாராம்) ஏற்பாடு செய்திருந்த இந்த உரையாடல் கடந்த ஆண்டு நவம்பர் 25- ஆம் தேதி நடைபெற்றது.