Home One Line P1 ‘இட ஒதுக்கீடு பேச்சுவார்த்தை இனி பாஸ் கட்சியுடன் இல்லை, தேசிய கூட்டணியுடன்!

‘இட ஒதுக்கீடு பேச்சுவார்த்தை இனி பாஸ் கட்சியுடன் இல்லை, தேசிய கூட்டணியுடன்!

523
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோவிற்கும், தேசிய முன்னணிக்கும் தொகுதி ஒதுக்கீடு விநியோக பிரச்சனை எவ்வாறு தீர்க்கப்படுகிறது என்பதைப் பொறுத்து தேசிய கூட்டணி இடையேயான உறவு என்று அம்னோ இளைஞர் தலைவர் அஷ்ராப் வாஜ்டி டுசுகி கூறினார்.

நேற்றிரவு அரசாங்கக் கட்சிகளைக் கொண்ட தேசிய கூட்டணி தலைவர்கள் மன்றம் நிறுவப்படுவதாக பிரதமர் மொகிதின் யாசின் அறிவித்ததை அடுத்து அவரது இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அம்னோ மற்றும் தேசிய முன்னணி, தேசிய கூட்டணியின் ஒரு பகுதியாக இல்லை என்பதை மீண்டும் நினைவுபடுத்திய அஷ்ராப் வாஜ்டி, தலைவர்கள் மன்றத்துடன், தொகுதிகளை விநியோகிப்பது குறித்த விவாதம் முன்பு போல இருக்காது என்று கூறினார்.

“இதன் பொருள், தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது இனி பாஸ் உடனான அம்னோவின் விவாதங்களை அடிப்படையாகக் கொண்டது அல்ல, ஆனால் தேசிய முன்னணி மற்றும் தேசிய கூட்டணி இடையே நிலவும். பாஸ் அதிகாரப்பூர்வமாக தேசிய கூட்டணியில் அதன் அங்கக் கட்சியாக இணைத்துள்ளது,” என்று அஷ்ராப் வாஜ்டி இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“அம்னோ உச்சமன்றக் குழு மற்றும் தேசிய முன்னணி உச்சமன்றக் குழு ஒரு தெளிவான முடிவை எடுத்துள்ளன. நாங்கள் 15- வது பொதுத் தேர்தல் வரை தேசிய கூட்டணி அரசாங்கத்தை ஆதரிக்கிறோம். மேலும் தேசிய கூட்டணியில் ஒரு கட்சியாக சேர ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டோம்,” என்று அவர் கூறினார்.

தலைவர்கள் மன்றம் அமைப்பது ஆரம்பத்திலிருந்தே அம்னோவால் முன்மொழியப்பட்டது. அதாவது மார்ச் மாதத்தில் தேசிய கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட்டபோது என்று ​​அஷ்ராப் வாஜ்டி கூறினார்.