Home One Line P1 கொவிட்19: புதிதாக 1,683 சம்பவங்கள் பதிவு

கொவிட்19: புதிதாக 1,683 சம்பவங்கள் பதிவு

713
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை வரையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,683 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன.

உள்ளூரில் 1,675தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், 8 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர் மூலம் பெறப்பட்டதாகும்.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 90,816 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

இன்று 1,214 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 75,244-ஆக உயர்ந்துள்ளது.

இன்னும், 15,140 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 106 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 51 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்று எந்தவொரு மரணமும் ஏற்படவில்லை. மரண எண்ணிக்கை 432-ஆக உள்ளது.