Home இந்தியா ஈரான்- பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்; டில்லியும் அதிர்ந்தது !

ஈரான்- பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்; டில்லியும் அதிர்ந்தது !

530
0
SHARE
Ad

earthபுதுடில்லி, ஏப்ரல் 17- பாகிஸ்தான், ஈரானில் நேற்று  பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 8 புள்ளிகளாக பதிவாகி இருப்பதால் உயிர்ச்சேதம் அதிகம் இருக்கும் என அஞ்சப்படுகிறது. தநைலகரான டில்லியில் நேற்று மாலை நில நடுக்கம் ஏற்பட்டது.
பலி 100 ஐ தாண்டும் ? 
ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கை 100 ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது.

பல்வேறு அடுக்குமாடி குடியிருப்பு  மக்கள் வீதிக்கு வந்தனர். இதனால் சில நிமிடங்கள் அங்கு பரபரப்பும், பதட்டமும் தொற்றிக்கொண்டது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

‌‌டில்லியில் நில அதிர்வு 

#TamilSchoolmychoice

நேற்று  மாலை 4.15 மணியளவில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்த மக்கள் வீதிக்கு வந்து கூட்டம், கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.

பல அடுக்குமாடிகள் குலுங்கியதை பலரும் உணர்ந்ததாக கூறினர். டில்லியை ஒட்டியுள்ள அரியானா, குர்கான், நொய்டா பகுதியிலும் இந்த நில நடுக்கம் இருந்தது. பாகிஸ்தான், ஈரானில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என அஞ்சப்படுகிறது. 8 ரிக்டர் அளவு பதிவானதாக கூறப்படுகிறது.

குஜராத், பஞ்சாப், உத்தரபிரதேசம் மாநிலங்களிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. ஆனால் இதுவரை சேதங்கள் குறித்த தகவல் எதுவும் இல்லை.