Home 13வது பொதுத் தேர்தல் இரு தொகுதிகளில் பிகேஆர் சின்னத்தில் போட்டியிட பிஎஸ்எம் முடிவு – செமினியில் மும்முனைப் போட்டி உறுதி

இரு தொகுதிகளில் பிகேஆர் சின்னத்தில் போட்டியிட பிஎஸ்எம் முடிவு – செமினியில் மும்முனைப் போட்டி உறுதி

870
0
SHARE
Ad

ARULகோலாலம்பூர்,ஏப்ரல் 17 – பொதுத்தேர்தலில் கோத்தா டாமன்சாரா மற்றும் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதிகளில், பிஎஸ்எம்  (Parti  Sosialis Malaysia) கட்சி போட்டியிட பிகேஆர் வழிவிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தங்களது கை முஷ்டி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று பிகேஆரிடம் விடாப்பிடியாகக் கூறிவந்த பிஎஸ்எம், தற்போது தங்களது பிடியை தளர்த்தி பிகேஆர் சின்னத்தில் போட்டியிடும் சுமூகத் தீர்வுக்கு வந்துள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட போது பிஎஸ்எம் கட்சிக்கு அரசியல் கட்சியாக பதிவு கிடைக்கவில்லை. எனவே, அப்போது பிஎஸ்எம் பிகேஆர் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டது.

#TamilSchoolmychoice

சுங்கை சிப்புட் தொகுதியில் டாக்டர் மைக்கல் ஜெயக்குமாரும், கோத்தா டமானசாராவில்  கட்சித்தலைவர் முகமட் நசிர் ஹிஷாமும் வெற்றி பெற, செமினியில் கட்சியின் தலைமைச்செயலாளர் அருட்செல்வம் தோல்விகண்டார்.

இருப்பினும் அருட்செல்வன்(படம்) வரும் பொதுத்தேர்தலில், செமினி தொகுதியில் பிஎஸ்எம் சின்னத்தில் போட்டியிடவுள்ளார் என்று அக்கட்சியின் தலைவரான டாக்டர் முகமத் நாசிர் ஹாசிம் இன்று அறிவித்துள்ளார்.

ஏற்கனவே, பிகேஆர் கட்சி செமினி தொகுதியில் தங்கள் வேட்பாளரை அறிவித்திருக்கும் நிலையில், தற்போது பிஎஸ்எம் கட்சியும்  அத்தொகுதியில்  போட்டியிடுவதால், அங்கு மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது.