Home One Line P2 இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் தாயார் காலமானார்

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் தாயார் காலமானார்

619
0
SHARE
Ad

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் உடல்நலக் குறைவால் இன்று திங்கிட்கிழமை காலமானார்.

கரீமா பேகம் இறந்த செய்தி அறிந்த இசை இரசிகர்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

ஏ.ஆர். ரஹ்மானுக்கு இசைத் துறைதான் சரியாக வரும் என அவரது தாயார்தான் அடையாளப்படுத்தியதாக ஏ.ஆர். ரஹ்மான் முன்பு ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

தமது தாயாரின் மரணம் குறித்த தகவலை அவரது புகைப்படம் ஒன்றினை டுவிட்டரில் பதிவிட்டு ஏ.ஆர்.ரஹ்மான் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், அப்புகைப்படத்திற்கு கீழ் எந்தவொரு பதிவுகளும் இல்லை. அதனைத் தொடர்ந்து, அவரது இசை இரசிகர்கள் அவருக்கு இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.