Home One Line P1 ஒவ்வொரு வீட்டிற்கும் கணினி வழங்கப்படும் என கமல்ஹாசன் பிரச்சாரம்

ஒவ்வொரு வீட்டிற்கும் கணினி வழங்கப்படும் என கமல்ஹாசன் பிரச்சாரம்

941
0
SHARE
Ad

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரங்களில் ஈடுபட்டுவருகின்றன.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. சிறப்பு திட்டங்களை அறிவித்து வரும் மக்கள் நீதி மய்யம் கட்சி, இப்போது அரசு முதலீட்டில் ஒவ்வொரு வீட்டிற்கும் கணினி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

“இது இலவசம் என்று நினைக்க வேண்டாம். மனித வளத்தின் மீது அரசின் முதலீடாகத் தான் கருத வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் கணினி சென்றடைந்த பிறகு அரசுக்கும், வீடுகளுக்கும் இடையில் நேரடி தொடர்பு ஏற்பட்டு விடும். அரசின் சேவைகளை எளிதில் பெற்றுக் கொள்ளலாம்,” என்று கமல்ஹாசன் கூறினார்.