Home One Line P1 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கான தங்கள் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கான தங்கள் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்

582
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அவசரகால நிலையில் அனைத்து நாடாளுமன்ற மற்றும் மாநில அமர்வுகளும் இடைநிறுத்தப்படும் என்று மக்களவைத் தலைவர் அசார் அசிசான் ஹருண் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த இடைநீக்கம் என்பது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது என்று அர்த்தமல்ல என்பதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் மக்கள் மீதான தங்கள் பொறுப்பை நிறைவேற்ற வேண்டியிருக்கும் என்று அவர் கூறினார்.

அரசு மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சுயேச்சைக் குழு, அவசரநிலை குறித்து மாமன்னருக்கு பரிந்துரைகளை வழங்கும் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“சுயேச்சைக் குழு மற்றும் சிறப்புக் குழுக்கள் மூலம், நாடாளுமன்றம் அதன் செயல்பாடுகளைத் தொடரும்,” என்று அவர் கூறினார்.

கொவிட் -19 பரவுவதைத் தடுக்க ஆகஸ்ட் 1- ஆம் தேதி வரை மாமன்னர் அவசரகால நிலையை அறிவித்தார்.