Home One Line P1 சுங்கை பூலோ மருத்துவமனையில் புதிதாக தீவிர சிகிச்சை பிரிவு திறப்பு

சுங்கை பூலோ மருத்துவமனையில் புதிதாக தீவிர சிகிச்சை பிரிவு திறப்பு

430
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டில் அன்றாட நோய்த்தொற்றுகள் அண்மையில் அதிகரித்ததைத் தொடர்ந்து, புதிய தீவிர சிகிச்சை பிரிவை ஏற்படுத்தி உள்ளதாக சுங்கை பூலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மருத்துவமனையின் தொற்று நோய்கள் துறையின் தலைவர் டாக்டர் சுரேஷ்குமார் கூறுகையில், சுங்கை பூலோ மருத்துவமனை சமீபத்தில் 4-வது வகையில் 2.76 விழுக்காடு முதல் 15.49 விழுக்காடு வரை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், பிரிவு 5 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்படுவதாகவும் கூறினார்.

வகை 4 நோயாளிகள் நுரையீரல் தொற்றுநோய் அறிகுறிகளுடன் உள்ளனர். மேலும், கூடுதல் பிரானவாயு தேவைப்படுகிறது. அதே நேரத்தில் 5-வது வகையைச் சேர்ந்தவர்கள், பல உறுப்பு சிக்கல்களைக் கொண்ட முக்கியமான நோயாளிகள் ஆவர்.

#TamilSchoolmychoice

“எங்கள் தீவிர சிகிச்சைப் பிரிவு சம்பவங்களின் விகிதங்கள் சாதாரண காலங்களை விட அதிவேகமாக உயர்கின்றன,” என்று அவர் கூறினார்.

எந்தவொரு கொவிட் -19 சம்பவங்களையும் மருத்துவமனை, திருப்பி விடவில்லை என்று சுரேஷ் உத்தரவாதம் அளித்தார். ஆனால், கடந்த இரண்டு வாரங்களில் மனிதவளமின்மை காரணமாக நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் மற்றும் இடமாற்றுவதில் தாமதங்கள் ஏற்பட்டதாக ஒப்புக்கொண்டார்.