Home One Line P1 பொதுப் போக்குவரத்து சேவைகள் தொடரும்

பொதுப் போக்குவரத்து சேவைகள் தொடரும்

838
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் இருக்கும் காலத்தில் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் வழக்கம்போல் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் அறிவித்தார்.

“பி-40 எனப்படும் வருமானம் குறைந்த மக்களில் பெரும்பான்மையோர் பொதுப் போக்குவரத்துகளையே தங்களின் அன்றாடத் தேவைகளுக்கு நம்பியிருப்பதால், அவர்களுக்காக பொதுப் போக்குவரத்து சேவைகள் தொடர்ந்து நடத்தப்படும்” என தனது முகநூல் பக்கத்தில் வீ கா சியோங் பதிவிட்டார்.

கடந்த மார்ச் மாதத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுல்படுத்தப்பட்டதிலிருந்து பேருந்து, இரயில் போன்ற பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து விட்டது என்றும் வீ கா சியோங் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.