பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தபின்னர் இது குறித்து பேசப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். இரவு 8 மணி வரை கால அவகாசம் தொழிலாலர்களுக்கு குறிப்பாக இரவு உணவு கிடைப்பது கடினமாக இருப்பதாக பலர் குறைக் கூறிவருகின்றனர்.
கொவிட் -19 தொற்றின் தினசரி சம்பவங்களையும் அரசு பரிசீலிக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
“நாங்கள் சிலரிடமிருந்தும் கருத்துகளைப் பெற்றோம். அனைத்து வணிக வளாகங்களும் இரவு 8 மணிக்கு மூடப்பட்டுள்ளன. உணவகங்கள் 10 மணிக்கு (இரவு) மூடப்பட்டால், இரவு 10 மணி வரை வேறொரு கடைகளைத் திறக்க வேண்டியது அவசியமா? என்று பேசி வருகிறோம். தற்போதைய தொற்று சம்பவங்கள் 3,000 க்கும் அதிகமாக உள்ளது. இதுவும் கடினம், எனவே சுகாதார அமைச்சு தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தட்டும்,” என்று அவர் மலேசியாகினிக்கு தெரிவித்தார்.
தற்போது ஏழு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மூலம், தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே உணவகங்கள் திறக்க அரசாங்கம் கால அவகாசம் நிர்ணயித்துள்ளது.