Home One Line P1 எஸ்பிஎம் மாணவர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை நடத்தப்பட வேண்டும்

எஸ்பிஎம் மாணவர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை நடத்தப்பட வேண்டும்

433
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாளை முதல் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களிடையே கொவிட் -19 பரிசோதனை தொடர்பான விடயத்தில் கல்வி அமைச்சின் மூலம் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் கேட்டுக் கொண்டார்.

கொவிட் -19 தொற்றுக்கு சாதகமானதாகக் கண்டறியப்பட்ட சபாவில் 18 மாணவர்கள் போன்ற சம்பவங்கள் பள்ளிக்குத் திரும்பும் மாணவர்களுக்கு நடக்கும் என்று அஞ்சப்படுகிறது என்று அவர் கூறினார்.

“எஸ்.பி.எம் தொற்றுக் குழு சம்பவம் நடப்பதை கல்வி அமைச்சு தடுக்க வேண்டும். சபா விடுதிகளில் உள்ள மாணவர்களின் சம்பவங்கள் கல்வி அமைச்சருக்கு சமிக்ஞையாக இருக்க வேண்டும். நான் எழுப்பிய கேள்வி புதிய கேள்வி அல்ல. இருப்பினும், நாளை பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு கொவிட் -19 பரிசோதனையை மேற்கொள்வது குறித்து உடனடியாக முடிவெடுப்பதற்கான வழியை அரசாங்கம் உடனடியாகக் கண்டுபிடிக்க வேண்டும்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

நேருக்கு நேர் பள்ளி அமர்வுகள், ஜனவரி 20 ஆம் தேதி தொடங்கப்பட வேண்டும் என்றும், முக்கிய தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களை மட்டுமே இது உள்ளடக்கும் என்று கல்வ் அமைச்சு அறிவித்தது.

இதில் எஸ்.பி.எம், எஸ்.வி.எம், எஸ்.கே.எம், எஸ்.டி.பி.எம், எஸ்.டி.ஏ.எம் மற்றும் டிப்ளோமா தொழிற்கல்வி ஆகியவை அடங்கும்.