கோலாலம்பூர்: முன்னணி சுகாதாரப் பணியாளரான டாக்டர் அலி நூர் ஹசானின் மனைவி, அசிலா அகர்னி தனது கணவர் வேலையில் சோர்வடைந்ததால் காலமானதை மறுத்தார்.
இதற்கு முன்னர் தொற்றுநோயால் அவர் மரணமுற்றார் எனும் வாதம் உண்மையில்லை என்று அவர் முகநூல் வாயிலாகக் கூறினார்.
“அவர் கோலாலம்பூர் மருத்துவமனையில் இறந்தார். கடுமையான சுவாசக் கோளாறு காரணமாக அவர் காலமானார். கொவிட் -19 அல்லது கொவிட் -19 க்கு எதிராக வேலை செய்ததில் ஏற்பட்ட சோர்வு காரணமாக அல்ல,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவும், டாக்டர் அலி கடமையில் ஏற்பட்ட சோர்வு காரணமாக அல்லது கொவிட் -19 நோய்த்தொற்று காரணமாக இறந்துவிட்டார் என்ற குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.
டாட்கர் அலிக்கு வேறு நோய் இருந்ததால் தான் என்று அவர் காலமானதாகவும், ஆனால் கேட்டபோது அதை அவர் வெளியிட மறுத்துவிட்டார் என்றும் கூறினார்.
முன்னதாக, நேற்று டாக்டர் அலி பணிச் சுமை மற்றும் சோர்வு காரணமாக நோய்வாய்ப்பட்டதாக அறிவித்து, காலமானதாக ஒரு முகநூல் பக்கம் கூறியிருந்தது.