Home One Line P2 அமெரிக்காவில் 100 நாட்களுக்கு மக்கள் முகக்கவசம் அணியும் சவால்!

அமெரிக்காவில் 100 நாட்களுக்கு மக்கள் முகக்கவசம் அணியும் சவால்!

444
0
SHARE
Ad

வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிதாக பதவியேற்ற அதிபர் ஜோ பைடன், கொவிட்-19 தொற்றை தடுக்க ‘100 நாள் முகக்கவச சவால்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதில், அடுத்த 100 நாட்களுக்கு மக்கள் அனைவரும் முகக்கவசங்கள் அணியவேண்டுமென்பதுதான் சவால்.

மேலும், வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு திரும்புவோர் அனைவரும் கட்டாயமாக கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். உலகளவில் கொவிட்-19 பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் அலட்சியத்தால் அமெரிக்கா இந்நிலைக்குத் தள்ளதப்பட்டதாக உலக மக்கள் குற்றம் சாட்டினார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, வெளியிலிருந்து அமெரிக்கா வந்தபிறகு அனைவரும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமென ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேலும், விமானங்களில் முகக்கவசம் கட்டாயமாக அணியவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பைடன் பதவியேற்ற 100 நாட்களில் 5 கோடி பேருக்கு கொவிட்-19 தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.