Home One Line P2 சசிகலாவுக்கு கொரொனா தொற்று இல்லை – விடுதலை உறுதி

சசிகலாவுக்கு கொரொனா தொற்று இல்லை – விடுதலை உறுதி

523
0
SHARE
Ad

பெங்களூரு –  உடல் நலக் குறைவால் இங்குள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என்பதை மருத்துவமனை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் மருத்துவமனையிலேயே இருந்து வருவார்.

இதற்கிடையில் சசிகலா எதிர்வரும் 27-ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையாகவிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அன்று காலை சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்து சசிகலாவை விடுதலை செய்யும் ஆவணங்களை வழங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து சசிகலா உடனடியாக சென்னை திரும்புவாரா, அல்லது தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து சிகிச்சை எடுத்துக் கொள்வாரா என்பது இன்னும் தெரியவில்லை.

பேரறிஞர் அண்ணா நினைவு நாளான பிப்ரவரி 3-ஆம் தேதி சசிகலா சென்னை திரும்புவார் என்றும் ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. சென்னை வந்ததும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துவார் என்றும், அதன் பின்னர் தஞ்சாவூரில் உள்ள அவரின் கணவர் எம்.நடராஜன் நினைவிடத்திற்கு செல்வார் என்றும் மற்றொரு ஊடகச் செய்தி குறிப்பிட்டது.