Home One Line P1 நாட்டுகோட்டை செட்டியார் கோயில் நிர்வாகத்தை பினாங்கு இந்து அறப்பணி அறவாரியம் ஏற்க திட்டம்

நாட்டுகோட்டை செட்டியார் கோயில் நிர்வாகத்தை பினாங்கு இந்து அறப்பணி அறவாரியம் ஏற்க திட்டம்

542
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: நாளை தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கில் இரத ஊர்வலத்தை மாநில அரசின் அனுமதியின்றி நடத்தியதால், நாட்டுகோட்டை செட்டியார் கோயிலின் நிர்வாகத்தை பினாங்கு இந்து அறப்பணி அறவாரியம் ஏற்க திட்டமிட்டுள்ளது.

பினாங்கு இந்து அறப்பணி அறவாரியம் தலைவர் பி.இராமசாமி கூறுகையில், அனைத்து பினாங்கு குடியிருப்பாளர்களின் பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும் புறக்கணித்து இந்த செயல் நடத்தப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கபப்டும் என்று கூறினார்.

“பினாங்கு இந்து அறப்பணி அறவாரியம் சட்டத்தின் 4- வது பிரிவு இந்த விவகாரம் குறித்து விவாதிக்க குழுவுக்கு உரிமை அளிக்கிறது. இதற்கு முன்னர் பினாங்கில் சிக்கலான கோயில்களை வாரியம் இப்படிதான் கையாண்டது. ஒரு பொது புகார் அல்லது தவறான நிர்வாகம் இருந்தால் வாரியம் தலையிட வேண்டிய அவசியம் உள்ளது. எவ்வாறாயினும், வாரியம் முதலில் மாநில நிர்வாக மன்றங்கள் மற்றும் மாநில ஆளுநர் ஒப்புதலைப் பெற வேண்டும், ” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

#TamilSchoolmychoice

“இதுவரை, பினாங்கில் இரத ஊர்வலத்தை நடத்த மாநில அரசுக்கு தேசிய பாதுகாப்பு மன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை. அவர்கள் (நாட்டுகோட்டை செட்டியார் கோயில்)  மாநில அரசு, தேசிய பாதுகாப்பு மன்றத்தின் அறிவுறுத்தல்களை மீறியிருந்தால், அதிகாரிகள் தீர்க்கமாக செயல்பட வேண்டும், ” என்று அவர் கூறினார்.