ஜோர்ஜ் டவுன்: பினாங்கில் இரத ஊர்வலம், கடுமையான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டது.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் இரதம் நாட்டுக்கோட்டை செட்டியார் கோயிலை நோக்கி புறப்பட்டது.
இந்நேரத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை கீழ் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் அனுமதியுடன் இதனை நடத்தியதாக நாட்டுகோட்டை செட்டியார் கோயில் அறங்காவளர் டாக்டர் நாராயணன் தெரிவித்தார்.
“இரதம் செல்லும் பாதையை காவல் துறை ஏற்படுத்தியது. நாங்கள் அனைத்து நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளையும் பின்பற்றினோம். இரதம் எங்கும் நிற்கவில்லை. கொவிட் -19 தொற்று காரணமாக நேரடியாக நாட்டுக்கோட்டை செட்டியார் கோயிலுக்கு மட்டுமே இரதம் சென்றது, ” என்று இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
10 பேர் மட்டுமே, பெரும்பாலும் கோயில் அதிகாரிகள் இரத ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.