Home One Line P1 கொவிட் -19: நஸ்ரி அசிஸ் சிகிச்சை முடிந்து, வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்

கொவிட் -19: நஸ்ரி அசிஸ் சிகிச்சை முடிந்து, வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்

516
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அசிஸ் கோத்தா பாரு ராஜா பெரெம்புவான் சைனாப் மருத்துவமனையில் கொவிட் -19 சிகிச்சையை முடித்துள்ளார்.

முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான அவர் நேற்று மாலை 5 மணிக்கு மருத்துவமனையில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டார்.

“நான் தற்போது வீட்டில் ஐந்து நாட்கள் கூடுதல் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறேன்,” என்று அவர் எப்எம்டியிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

கடந்த மாத தொடக்கத்தில் அம்னோ தலைமையகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட, பின்னர் ஜனவரி 18 அன்று நஸ்ரி கொவிட் -19 தொற்றுக்கு ஆளானார்.

பிரதமர் துறை அமைச்சர் (பொருளாதாரம்) முஸ்தபா முகமட், பெண்கள், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரினா ஹருண், உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின், தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக துணை அமைச்சர் சாஹிடி சைனுல் அபிடின், தேசிய ஒற்றுமை அமைச்சர் ஹலிமா முகமட் சாதிக் மற்றும் குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரசாலி ஹம்சா ஆகியோர் கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்ட பிற அரசியல்வாதிகள் ஆவர்.