Home One Line P1 இரவு சந்தைகள் செயல்பட அனுமதி

இரவு சந்தைகள் செயல்பட அனுமதி

733
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இரண்டாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஒழுங்குக்கான புதுப்பிக்கப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளின் கீழ் இரவு சந்தைகள் இப்போது செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

ஜனவரி 27 தேதியிட்ட இப்புதிய நடைமுறைகளில், இரவு சந்தைகள் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட முடியும் என்று கூறுகிறது. இது தற்போது செயல்பாட்டில் உள்ள அனைத்து வணிகங்களும் முன்பு இரவு 8 மணியுடன் அடைக்கப்பட்டன. பின்பு அது இரவு 10 மணி வரை செயல்பட அனுமதித்தது.

முன்னதாக, பகல் நேரத்தில் வழக்கமான சந்தைகள் செயல்பட்ட போதிலும் இரவு சந்தைகள் செயல்பட அனுமதிக்கப்படவில்லை.

#TamilSchoolmychoice

இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஜனவரி 13- ஆம் தேதி செயல்படுத்தப்பட்டது. பிப்ரவரி 4- ஆம் தேதியுடன் காலாவதியாகிறது. இந்த உத்தரவு நான்கு வாரங்களுக்கு மேல் (பிப்ரவரி 10) நடைமுறைக்கு வராது என்றும். அதன் பின்னர் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படும் என்றும் அண்மையில் தெரிவிக்கப்பட்டது.