Home One Line P1 தைப்பூசம்: அரசு விதித்த நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டே ஆலயத்திற்குச் சென்றேன்!- சரவணன்

தைப்பூசம்: அரசு விதித்த நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டே ஆலயத்திற்குச் சென்றேன்!- சரவணன்

556
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முகக்கவசம் அணியாமல் பத்து மலை ஆலயத்தில் மனிதவளத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தைப்பூசமன்று வருகையளித்தது சமூக ஊடகப் பயனர்கள் மத்தியில் சர்ச்சையாக வெடித்தது.

கோயிலுக்குச் சென்றதன் மூலம் அவர் அரசு விதித்திருந்த நடைமுறைகளை மதிக்கவில்லை என்று அவர்கள் கருத்துகள் தெரிவித்துள்ளனர்.

பரவலாகப் பகிரப்பட்ட ஒரு காணொலியில், முகக்கவசம்  இல்லாமல் அமைச்சர், ஆலயத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜாவால் வரவேற்கப்படுவது கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அவரை வரவேற்க மேள தாளங்கள் இருந்ததையும் அவர்கள் சுட்டிக் காட்டினர்.

#TamilSchoolmychoice

தைப்பூசம் அன்று வருடாந்திர இரத ஊர்வலத்தை மக்கள் இயங்கலை வாயிலாக நேரடியாகக் காண இயலும் என்று நடராஜா அண்மையில் கூறியிருந்தார். கடந்த வாரம் கோயிலுக்கு உதவி செய்ய அமைச்சர் ஈடுபட்டிருந்ததால் தான் அழைக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

“நான் அமைச்சரவையில் இந்து விவகாரங்களுக்கான பிரதிநிதி. கோயிலுக்கு வருகைத்தர எனக்கு காவல் துறை அனுமதி அளித்தது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கொவிட் -19 நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டனர்,” என்று அவர் கூறினார்.