ஷா ஆலாம்: கொவிட் -19 சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தொழிற்சாலைகள் கண்காணிப்பை மாநில அரசு முடுக்கிவிட்டு, தவறான வணிகங்களுக்கு எதிராக செயல்படும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறியுள்ளார்.
சிலாங்கூர் நேற்று 3,126 புதிய சம்பவங்களை பதிவு செய்த பின்னர், தேசிய தினசரி எண்ணிக்கையை 5,725- ஆக உயர்த்தது.
கடந்த ஆண்டு நவம்பர் 24- ஆம் தேதி, சிலாங்கூருக்கான அதிகமான முந்தைய பதிவு 1,623 சம்பவங்கள் ஆகும்.
கடந்த 10 நாட்களில் சிலாங்கூரில் புதிய கொவிட் -19 சம்பவங்களைப் புகாரளிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் இந்த வியத்தகு அதிகரிப்புக்குக் காரணம் என்றும், இதனை சரிசெய்ய தனியார் மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகள் தாமதமாக சம்பவங்களை புகாரளித்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
கொவிட் -19 பரவுவதற்கான ஒரு முக்கிய இடமாக மாநிலம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகள், இந்த சந்திப்பில் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அமிருடின் கூறினார்.