ஆஸ்திரேலியா: கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ பரவி பல்லாயிரக்கணக்கான விலங்குகளும், குடியிருப்பாளர்கள், தீயணைப்பு வேரர்களும் உயிரிழந்தனர்.
அங்கு மீண்டும் காட்டுத்தீ பரவி அபாயநிலை உருவாகியுள்ளதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். பெர்த் நகரில் பலமான காற்று வீசி வருவதால், புதர்காடுகளில் காட்டுத்தீ வேகமாக பரவக்கூடிய அபாயநிலை ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து, ஆயிரக்கணக்கானோர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
கடந்தாண்டு ஏற்பட்ட தீயில், 9,000 ஹெக்டேர் நிலமும், 71 வீடுகளும் எரிந்து சேதமடைந்தன. பெர்த் நகரில் சூடான, வறண்ட வானிலை உருவாகியுள்ளதால் மக்கள் பெர்த் நகரை விட்டு வெளியேறும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.