Home One Line P1 ‘சீனா தனது மனித உரிமை மீறல்களுக்கு ஒரு விலை கொடுக்கும்!’- அமெரிக்கா

‘சீனா தனது மனித உரிமை மீறல்களுக்கு ஒரு விலை கொடுக்கும்!’- அமெரிக்கா

469
0
SHARE
Ad

மில்வாக்கி: சீனா தனது மனித உரிமை மீறல்களுக்கு ஒரு விலை கொடுக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செவ்வாய்க்கிழமை எச்சரித்துள்ளார்.

முஸ்லீம் சிறுபான்மையினரை அதன் மேற்கு நகரமான சின்ஜியாங்கில் நடத்தும் விதம் குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வினவல்களுக்கு அதிபர் பதிலளித்தார்.

சிறுபான்மை உய்குர்களை தடுப்பு முகாம்களிலும், பிற மனித உரிமை மீறல்களிலும் வைத்திருப்பதாக சீன அதிபர் ஜி ஜின்பெங் உலகளாவிய விமர்சனங்களைப் பெற்றுள்ளார்.

#TamilSchoolmychoice

“சீனாவுக்கு எதிர்விளைவுகள் ஏற்படும். இது அந்நாட்டுக்கும் தெரியும்” என்று பைடன் கூறினார்.

மனித உரிமைகளுக்காகப் பேசுவதில் அமெரிக்கா தனது உலகளாவிய பங்கை மீண்டும் உறுதிப்படுத்தும், என்றும், சீனாவின் சிறுபான்மையினரைப் பாதுகாக்க அனைத்துலக சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவேன் என்றும் பைடன் கூறினார்.