Home One Line P1 ஊழல் நடவடிக்கைகளுக்கு உடன்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை சேவியர் ஜெயக்குமார் மறுத்தார்

ஊழல் நடவடிக்கைகளுக்கு உடன்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை சேவியர் ஜெயக்குமார் மறுத்தார்

385
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தனக்கு பழக்கமான பேராக் பிகேஆர் துணைத் தலைவர் எம்.ஏ.தினகரனை எம்ஏசிசி கைது செய்ததைத் தொடர்ந்து, பிகேஆர் உதவித் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் ஊழல் நடவடிக்கைகளுக்கு உடன்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

முன்னாள் அமைச்சரான சேவியர், தினகரன் குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என்றும், , அவரது உதவியாளர் அல்ல என்றும் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

“சமீபத்திய ஊடக அறிக்கையில், எனது பெயர் இணைக்கப்பட்டுள்ளது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக எனக்கு எதிராக தப்பெண்ணத்தை எழுப்பியது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆலோசனையின் பேரில், அதிகாரிகளிடம் எனது பெயருக்கு கலங்கம் ஏற்படாமல் இருக்க இந்த முடிவினை எடுத்தேன்,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

தினகரன் நேற்று கைது செய்யப்பட்டார். விசாரணையில் தொடர்பு இருப்பதாக நம்பப்படும் ஒரு வாகனத்தை பறிமுதல் செய்வதற்காக கிள்ளானில் உள்ள ஜெயகுமாரின் வீட்டையும் எம்ஏசிசி அதிகாரிகள் சோதனை செய்ததாக கூறப்படுகிறது.

பேராக்கில் ஒரு மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான விசாரணை தொடர்பாக தினகரன் கைது செய்யப்பட்டதாக வட்டாரங்கள் கூறுகின்றன.