Home One Line P1 மியான்மார்: இராணுவத்திற்கு எதிரான போராட்டத்தில் இருவர் பலி- ஐநா சாடல்

மியான்மார்: இராணுவத்திற்கு எதிரான போராட்டத்தில் இருவர் பலி- ஐநா சாடல்

757
0
SHARE
Ad
படம்: ஐ.நா. பொதுச்செயலாளர் அன்தோனியோ குட்டரெஸ்

ஜெனீவா: மியான்மாரில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து மக்கள் சாலையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், இராணுவம் விதித்துள்ள தடையை மீறி இந்தப் போராட்டங்கள் நடைபெறுவதால் போராட்டத்தை ஒடுக்க அடக்கு முறையை இராணுவம் கையாண்டு வருகிறது.

மண்டலே நகரில் ஏராளமான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

#TamilSchoolmychoice

கடந்த தேர்தலில் ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடு இருப்பதாக அந்நாட்டு இராணுவம் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது.

இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சாங் சூகி தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்த இராணுவம் பொறுப்பை கைபற்றியது.

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராகப் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மியான்மர் இராணுவத்தின் இந்த கடுமையான செயலுக்கு, ஐ.நா. பொதுச்செயலாளர் அன்தோனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோருக்கு எதிராக, ஆபத்தை விளைவிக்கும் வகையில் படைகளை பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாதது என்று அவர் தெரிவித்துள்ளார்.