Home One Line P1 15-வது பொதுத் தேர்தலில் பெர்சாத்துவுடன் இணைய அம்னோ மறுப்பு

15-வது பொதுத் தேர்தலில் பெர்சாத்துவுடன் இணைய அம்னோ மறுப்பு

481
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அவசரநிலை முடிந்தவுடன் பெர்சாத்து மற்றும் தேசிய கூட்டணி உடனான ஒத்துழைப்பை முடிவுக்கு கொண்டுவர அம்னோ முடிவு செய்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை பகாங்கில் நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி இந்த முடிவை எடுத்ததாக கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.

“அவசரநிலை முடிந்தவுடன் பெர்சாத்துவுடனான தனது ஒத்துழைப்பை முடிவுக்கு கொண்டுவர அம்னோ முடிவு செய்துள்ளது. அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் தலைவர் இந்த விஷயத்தை அறிவித்தார். துணை பிரதமர் பதவி தொடர்பான எந்தவொரு சலுகையையும் அம்னோ ஏற்காது,” என்று அந்த வட்டாரம் மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

பெர்சாத்து, அம்னோவின் உறவில் சமீபத்திய மாதங்களில் பிளவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், பெயர் குறிப்பிட மறுத்த உச்சமன்றக் குழு உறுப்பினர் ஒருவர், பெர்சாத்து மற்றும் தேசிய கூட்டணிவுடனான ஒத்துழைப்பை நிராகரிக்க சாஹிட் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தினார் என்று கூறியது.

அம்னோவுக்கு துணைப் பிரதமர் பதவியை வழங்குவதற்கான தேசிய கூட்டணியின் வாய்ப்பையும் நிராகரிப்பதாக கட்சித் தலைவர் கூறினார்.

சபா மாநிலத் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட ஒத்துழைப்பு சூத்திரத்தை ஆதரித்த பெரும்பான்மையான அம்னோ உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு எதிராக சாஹிட் செயல்படுவதாக அவர் கூறினார்.

எவ்வாறாயினும், கடந்த மாதம் நாடு முழுவதும் 191 அம்னோ தொகுதிகளில் மொத்தம் 189 பேர் 15-வது பொதுத் தேர்தலுக்காக பெர்சாத்துவுடனான எந்தவொரு ஒத்துழைப்பையும் நிராகரித்ததாக தெரிவிக்கப்பட்டது.