Home One Line P1 சட்டத்துறைத் தலைவர் கடமைகளில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும்- மசீச

சட்டத்துறைத் தலைவர் கடமைகளில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும்- மசீச

426
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாகினி செய்தித்தளத்திற்கு எதிராக கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து சட்டத்துறைத் தலைவரின் கடமைகளில் சீர்திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என்று மசீச கூறியுள்ளது.

மசீச பொது சமூக ஒருங்கிணைப்பு பிரிவுத் தலைவர் எங் கியான் நாம், இந்த முடிவு பேச்சு சுதந்திரத்தை ஒடுக்கும் ஓர் ஆபத்தான முன்னுதாரணத்தை அமைக்கிறது என்று கட்சி கவலைப்படுவதாகக் கூறினார்.

அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான பொறுப்பை சட்டத்துறை தலைவர் இட்ருஸ் ஹருண் செயல்படுத்தியதை அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“மலேசியாகினி ஆசிரியர்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய நீதிமன்ற அவமதிப்பைத் தொடங்கிய இட்ருஸ், மலேசிய நீதித்துறையை அவமானத்திற்குக் கொண்டு வந்துள்ளார். மலேசியாவில் பேச்சு சுதந்திரத்தை குறைத்து மதிப்பிடுவதற்கு வழி வகுத்துள்ளார். அவர் பிரச்சனையைத் துவக்கியவர் என்பதால் கண்டனங்களுக்கு உடையவர்,” என்று எங் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

“சட்டத்துறை ஆலோசகராகவும் மற்றும் குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டுமென்றால் பொது வழக்கறிஞராக, அவரை நியமிப்பது போன்ற கட்டமைப்பு சீர்திருத்தங்களை விரைவில் செயல்படுத்த பிரதமரை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இவ்வழியாக மட்டுமே நமது நீதித்துறை அமைப்பின் சுதந்திரமும் நமது குடிமக்களின் பேச்சு சுதந்திரமும் உண்மையிலேயே உறுதிப்படுத்தப்பட முடியும்,” என்று அவர் மேலும் கூறினார்.