Home One Line P1 பிரதமரை விவாதத்திற்கு அழைத்த புவாட் சர்காஷி

பிரதமரை விவாதத்திற்கு அழைத்த புவாட் சர்காஷி

395
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினை அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர் புவாட் சர்காஷி விவாதத்திற்கு அழைத்துள்ளார்.

“எனது வழக்கறிஞர் பிரதமரின் வழக்கறிஞர் கடிதத்திற்கு பதிலளித்துள்ளார். வழக்கறிஞர்கள் விவகாரம் எனக்கு புதிது. காரணம் வழக்குத் தொடரப்பட்டதில்லை. இப்போது பிரதமர் பதவியில் இருக்கும் ஒருவரின் வழக்கினை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது,” என்று அவர் தமது முகநூல் பதிவில் இன்று தெரிவித்துள்ளார்.

வழக்கு தொடுக்கும் விசயத்தில் பிரதமர் பாரபட்சம் பார்க்க இல்லை என்று புவாட் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“ஒரு நாள் மீனவர்கள், தோட்டத் தொழிலாளர்களையும் பிரதமர் குறி வைப்பார். அப்படியானால், நீதிமன்றத்தில் சந்திப்பதற்கு முன்பு டான்ஸ்ரீ மொகிதினுடன் விவாதம் செய்வதில் எந்தத் தவறுமில்லை. என்னுடன் விவாதிப்பது பிரதமரின் வேலை, தகுதி அல்ல, என்று பிறர் கூற முடியாது. வழக்குத் தொடர முடிகிறதென்றால், ஏன் விவாதம் செய்யக்கூடாது?,” என்று அவர் வினவினார்.

தவறு என்னவென்று கண்டுபிடிப்பதற்கே இந்த விவாதத்திற்கு தாம் அழைப்பதாகவும் புவார் மேலும் கூறியுள்ளார்.