கோலாலம்பூர்: அம்னோ தேசிய கூட்டணியை ஆதரிக்கிறதா அல்லது நேர்மாறாக இருக்கிறதா என்ற கருத்து வேறுபாடுகள், இப்போது அவர்களின் தலைவர் அகமட் சாஹிட் ஹமீடியை வெளியேற்றும் முயற்சிகள் வரை மோசமாகி வருவதாகக் கூறப்படுகிறது.
கட்சிக்குள்ளேயே, சாஹிட்டின் ஆளுமையை குறிவைத்து எழுதப்பட்ட பிரச்சார நூல் ஒன்று ஊடுருவி வருவதை வட்டாரம் தெரிவித்ததாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.
அம்னோ தலைவர் பதவியில் இருந்து அகமட் சாஹிட் பதவி விலக 30 காரணங்கள் என்ற தலைப்பில் புத்தகம் ஒன்று அம்னோ உறுப்பினர்கள் மத்தியில் அச்சு மற்றும் மின்னியல் வடிவத்தில் பரப்பப்படுகிறது. இது கடந்த மாதம் முதல் பரவத் தொடங்கியது.
அகமட் சாஹிட்டின் நீதிமன்ற வழக்குகள், அம்னோவின் மோசமான தடம், அவர் தலைவரானதிலிருந்து பல இடைத்தேர்தல்களில் தோல்வி மற்றும் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்ற கட்சிகளுக்கு இடம்பெயர்ந்தது ஆகியவை அப்புத்தகத்தில் எழுப்பப்பட்டுள்ளன.
அகமட் சாஹிட் ஜசெக உடன் ஒத்துழைத்தார் என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.
அந்த வாதங்களை மறுக்க, அகமட் சாஹிட்டை தற்காத்துப் பேச மற்றொரு புத்தகம் வெளியிடப்பட்டது.
தேசிய அரசியல் புத்தகங்களை வெளியிடுவதில் “டாலில்” என்ற வார்த்தையின் பயன்பாடு 1990- களின் பிற்பகுதியில் தொடங்கியது. அன்வார் இப்ராகிமை அம்னோவிலிருந்து வெளியேற்றுவதற்கான பிரச்சாரத்தில் சில குழுக்கள் அத்தகைய தலைப்புகளுடன் புத்தகங்களைத் தயாரித்தன.