Home One Line P2 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்

520
0
SHARE
Ad

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 89.

நேற்று முன்தினம் உடல்நிலை மோசமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சூழலில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அவருக்கு சிறுநீரக பாதிப்பு இருந்ததால், அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

#TamilSchoolmychoice

முதலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றினார். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி ஒருங்கிணைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அப்போது வட சென்னை மக்களவை தொகுதியில் இருந்து போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, 2015-ஆம் ஆண்டு வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக ஆறு ஆண்டுகள் நிலைத்திருந்தார்.