Home One Line P1 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பகுதிகளில் முஸ்லிம் அல்லாதவர் திருமணங்களுக்கு அனுமதி

கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பகுதிகளில் முஸ்லிம் அல்லாதவர் திருமணங்களுக்கு அனுமதி

336
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாட்டு ஆணை மற்றும் மீட்சிக்கான கட்டுப்பாட்டு ஆணை பகுதிகளில் இன்று பதிவு அலுவலகங்கள் (ஜேபிஎன்) மற்றும் கோயில்களில் திருமணம் நடத்தலாம் என்று தேசிய பாதுகாப்பு மன்றம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் திருமணங்கள் இன்னும் அனுமதிக்கப்படவில்லை.

இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமையிலான கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அது கூறியுள்ளது.

#TamilSchoolmychoice

ஜேபிஎன்னில் திருமண பதிவுக்கான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளில் பதிவாளர் உட்பட அதிகபட்சம் 10 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மத அமைப்புகளில் திருமணங்களுக்கு, நடமட்டக் கட்டுப்பாட்டு ஆணை பகுதிகளில் விருந்தினர்களின் எண்ணிக்கை 10-ஆகவும், நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாட்டு ஆணை பகுதிகளில் 20 பேர் மற்றும் மீட்சிக்கான கட்டுப்பாட்டு ஆணை பகுதிகளில் 30 பேர் அனுமதிக்கப்படுகின்றனர்.

“இருப்பினும், நடைமுறைகள் வளாகத்தின் அளவிற்கு உட்பட்டவை,” என்று அது கூறியது.