Home One Line P1 தனக்கு செலுத்தப்பட இருந்த தடுப்பூசியை ஹம்சா முன்னணி பணியாளருக்கு விட்டுக்கொடுத்தார்

தனக்கு செலுத்தப்பட இருந்த தடுப்பூசியை ஹம்சா முன்னணி பணியாளருக்கு விட்டுக்கொடுத்தார்

823
0
SHARE
Ad

புத்ராஜெயா: தமக்கு வழங்கப்பட இருந்த கொவிட் -19 தடுப்பூசியை, உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் இன்று சுகாதார அமைச்சின் முன்னணியில் இருப்பவருக்கு தனது இடத்தை விட்டுக் கொடுத்தார். நோயிலிருந்து விடுபட்ட நோயாளியாக தன்னிடம் இன்னும் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக அவர் கூறினார்.

“கொவிட் -19 நோய்த்தொற்றுக்குப் பிறகு நான் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டதால், எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளன,” என்று ஹம்சா கூறினார்.

கொவிட் -19 தொற்றுக்கு ஆளாகி ஹம்சா கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

பிபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியைப் பெறுவதற்கான வரிசையில் அமைச்சரின் தடுப்பூசி, சுகாதார அமைச்சின் சுகாதார கல்வி அதிகாரியான முகமட் ரிட்ஸ்வான் சகாரியாவுக்கு வழங்கப்பட்டது.

எட்டு ஆண்டுகளாக சுகாதார அமைச்சில் பணியாற்றிய ரிட்ஸ்வான், தடுப்பூசிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.