இதில் 1,821 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 7 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களால் பதிவானவை. இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 302,580 ஆக அதிகரித்துள்ளன.
கடந்த ஒரு நாளில் மட்டும் 2,486 பேர் குணமடைந்து இல்லம் திரும்பியிருக்கின்றனர். தொற்றுகளில் இருந்து குணமாகி இல்லம் திரும்பியவர்களின் எண்ணிக்கை 275,903 ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்று வருபவர்களில் 198 பேர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்படுகிறது. அவர்களில் 90 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.
இன்றைய ஒரு நாளில் 5 மரணங்கள் பதிவானதைத் தொடர்ந்து இதுவரையிலான மரண எண்ணிக்கை 1,135- ஆக உயர்ந்துள்ளது.
மாநிலங்கள் அளவில் மிக அதிகமான சம்பவங்கள் ஜோகூரில் பதிவாகி உள்ளன. சுமார் 490 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. சிலாங்கூரில் 453 சம்பவங்கள் பதிவாகி உள்ளது. சவாக்கில் 220 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.