ஜோகூர் பாரு: ஜோகூர் பி.கே.ஆர் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சூங் தேசிய கூட்டணியை ஆதரித்ததை அடுத்து வாக்காளர்களிடம் மன்னிப்பு கோரி உள்ளது.
ஜோகூர் பி.கே.ஆர் தலைவர் சைட் இப்ராகிம், தெப்ராவ்வில் வாக்காளர்களுக்கு தொடர்ந்து சேவை செய்வது குறித்து கட்சி விவாதித்து வருவதாக தெரிவித்தது.
இடைநிறுத்தப்பட்ட நாடாளுமன்ற கூட்டத்தொடரை சாதகமானகப் பயன்படுத்திக் கொண்டு , தேசிய கூட்டணி, அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், தொடர்ந்து அரசியல் தொடரவும் இவ்வாறு செய்துள்ளது என்று அது கூறியது.
“மக்கள் ஆணைக்கு துரோகம் இழைப்பது எந்த காரணத்திற்காகவும் செய்யக்கூடாது. அதிகாரத்தை வைத்திருக்கும் போது அச்சுறுத்தல்கள், வேலை வாய்ப்புகள் மற்றும் வெகுமதிகள் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவது விமர்சிக்கப்படக்கூடியது. உண்மையில், இது ஒரு வகையான ஊழலாக கருதப்படலாம். அரசியல் ஊழல் மக்களால் நிராகரிக்கப்பட வேண்டும்,” என்று அதன் தலைவர் சைட் இப்ராகிம் சைட் நோ கூறினார்.
கடந்த சனிக்கிழமையன்று, ஸ்டீவன் சூங், ஜுலாவ் நாடாளுமன்ற உறுப்பினர் லாரி சங், உடன் பி.கே.ஆரிலிருந்து விலகி தேசிய கூட்டணிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தார்.