கோலாலம்பூர்: இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தபோதிலும், தேசிய கூட்டணிக்கு மக்களவையில் பெரும்பான்மை இன்னும் போதுமான இல்லை என்று பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.
எதிர்க்கட்சிக்கு தேவையான எண்ணிக்கை உள்ளன என்றார்.
“இரண்டு (நாடாளுமன்ற உறுப்பினர்கள்) தாவினாலும், அவர்கள் பெரும்பான்மை பெறவில்லை. தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். எங்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஆதரவே அவர்களுக்கு உள்ளது,” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, இரண்டு பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினர்களான, லாரி சங் (ஜுலாவ்) மற்றும் ஸ்டீவன் சூங் (தெப்ராவ்) ஆகியோர் தேசிய கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக சத்தியப் பிரமாண கடிதத்தை பிரதமரிடம் வழங்கினர்.
எம்.ஏ.சி.சி மற்றும் உள்நாட்டு வருமான வரி வாரியம் போன்ற அரசு நிறுவனங்கள் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள மிரட்டுவதால் இந்த முடிவுகள் எழுவதாக அன்வார் கூறினார்.
முன்னதாக, நேற்று, முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட், எதிர்க்கட்சிக்கு இனி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்று தெரிவித்திருந்தார்.