Home அரசியல் ஜ.செ.க ராக்கெட் சின்னத்தைப் பயன்படுத்தி தேர்தலில் போட்டியிடலாம் – தேர்தல் ஆணையம் மற்றும் ஆர்.ஓ.எஸ்(ROS) உறுதி

ஜ.செ.க ராக்கெட் சின்னத்தைப் பயன்படுத்தி தேர்தலில் போட்டியிடலாம் – தேர்தல் ஆணையம் மற்றும் ஆர்.ஓ.எஸ்(ROS) உறுதி

591
0
SHARE
Ad

DAP-Logo-Featureகோலாலம்பூர், ஏப்ரல் 18 – சங்கப் பதிவாளர் அலுவலகம் ஜ.செ.க கட்சியின் பதிவை ரத்து செய்தாலும், வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கலில் ஜ.செ.க வேட்பாளர்கள் கலந்து கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் அப்துல் அஜீஸ் முகமத் யூசூப் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, சங்கப் பதிவாளர் அலுவலகமும் (ROS) வரும் பொதுத்தேர்தலில், ஜ.செ.க வேட்பாளர்கள் ராக்கெட் சின்னத்தைப் பயன்படுத்துவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.